Skip to main content

Posts

Featured

பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?

பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?

ஆகஸ்ட் 5ம் தேதி புதனன்று காலையில், உதம்பூரிலுள்ள எல்லை பாதுகாப்பு படை
முகாமின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் இருவரில் ஒருவனை ஜம்மு
கஷ்மீர் பாதுகாப்பு படையினர் உயிரோடு பிடித்துள்ளனர். மற்றொருவன் சுட்டு
வீழ்த்தப்பட்டான். பயங்கரவாதியை உயிருடன் கைப்பற்றியது, 26/11 மும்பை
தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டதற்கு பிறகு நிகழும்
முதல்-பெரும் நகர்வு என கருதப்படுகிறது.

கரும் நீல சட்டையும், பழுப்புநிறக் காற்சட்டையும் அணிந்த அந்த இளைஞனை
பார்த்தால் உங்களால் அவனை பயங்கரவாதி என்று கூற முடியாது. கல்லூரிகளில்
சுற்றித்திரியும் போக்கிரி மாணவன் போல் காட்சியளிக்கும் அந்த இளைஞன்,
பதினோரு எல்லை காவல் படையினரை காயப்படுத்தியதுடன், இரண்டு எல்லை காவல்
படையினரை சுட்டு வீழ்த்தியுள்ளான் என்பது வேதனையான தகவல். அவனும், அவனது
கூட்டாளியும் ரோந்தில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்
நிகழ்த்தி விட்டு தப்பி ஓட முயன்ற பொழுது பிடிபட்டுள்ளான்.

கைப்பற்றப்பட்ட பயங்கரவாதி உஸ்மான் என இனங்காணப்பட்டுள்ளான். சில
ஊடகங்கள் அவனை காசிம் கான் எனவும் அழைக்கின்ற…

Latest Posts

சுதந்திரம் என்றால் என்னவென்று

இரண்டு இறுதிச் சடங்குகள்