கிம் கி டக்

ப்ரெத்(2007) திரைப்பட போஸ்டர்
உங்களுடைய திரைப்படங்களில் அதீத அளவு உணர்ச்சி பெறுக்கெடுத்தோடுகிறது, அன்பும், வன்முறையும் சரி விகிதத்தில் இருப்பதாகவேப் படுகிறது. எங்கிருந்து இவை பிறக்கின்றது அல்லது பெறப்படுகிறது ?

கிம் கி டக்: என்னை பொருத்தவரை, ஒவ்வோரு மனிதனும் பல உணர்ச்சிகளின் குவியல் என்றே நம்புகிறேன். இந்த உலகம் பொது புத்தியின் அடிப்படையில் என்ன சொல்கின்றதோ அதை நான் அப்படியே மறுதாக்கம் செய்ய விரும்பவில்லை. மாறாக அதில் உள்ள உண்மையை கண்டடைய முயற்சிக்கிறேன். ஒருவன் மீண்டும் மீண்டும் சண்டையிடுகிறான் என்றால் அதில் அவன் சிறந்தவன் என்று எடுத்துக்கொள்ள தேவையில்லை, அவன் அச்சம் கொள்கிறான் அதனாலேயே சண்டையிடுகிறான் என்பதே உண்மை.   

உங்கள் திரைப்படங்களில் வரும் கதாபத்திரங்கள் குறைந்த அளவே பேசுகிறார்கள், காட்சிகள் மூலமாக கதை சொல்வதில் நீங்கள் சிறந்தவராக உள்ள போதிலும் உங்கள் கதாபாத்திரங்களும் குறைவாகவே பேச வேண்டிய அவசியம் என்ன?

கிம் கி டக்: பேசுவதன் மூலம் ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும் என்பதில், எனக்கு நம்பிக்கை இல்லை. அமைதி ஏற்படுத்தும் உணர்ச்சியின் வெளிப்பாட்டை, வசனத்தால் ஏற்படுத்த முடிவதில்லை. சில நேரங்களில் மொழி, பிறழ்வை ஏற்படுத்துகிறது.

பல வேலைகளில் உங்களுடைய திரைப்படங்களின் தீர்க்கமான முடிவு என்று ஒன்றே இல்லை, முடிவை பார்வையாளனிடமே விட்டுவிடுகிறீர்கள் ஏன் அவ்வாறு முடிவதை விரும்புகிறீர்கள்?

கிம்: ஒரு இயக்குநர் எல்லாவற்றையும் காட்சிபடுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. திரைப்படம் என்பது கேள்விக்குள்ளாக்க பட வேண்டியது. நான் அந்த கேள்வியை எனது பார்வையாளர்களிடம் விட்டுவிடுகிறேன். அவர்கள் விடையை தேடி, அவர்களுக்குள் விவாதிக்கவே விரும்புகிறேன். அதனால் தான் திரைப்படம், இன்றளவும் சுவாரஸ்யம் ததும்பும் கலையாக உள்ளது.

நீங்கள் கொரிய இராணுவத்தில் பணி புரிந்திருக்கிறீர்கள் அல்லவா! அது உங்களுடைய படமாக்கும் பாணியில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது?

கிம் கி டக்: ம்ம் நான் கப்பற்படையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அங்குதான் பல்வேறு வகையான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அறிவையும், ஆளுமையையும், வன்முறையையும் நான் அங்குதான் கற்றறிந்தேன். வட கொரியாவிற்கு எதிராக நாங்கள் கடுமையாக தயார் படுத்தப்பட்டோம். அந்த தருணத்தில் தான் நான் குழப்பம் அடைந்தேன், அதுவே என்னை சிந்திக்க வைத்தது. அது என் திரைப்படத்திலும் பிரதிபலித்தது. முக்கிய விடயம் யாது எனில் நாம் மற்றவர்கள் மீது வைத்திறாத மரியாதை, விபத்து நடைபெருவதற்கு முக்கிய காரணமாகிறது. நாம் வலியுடன் இருப்பதற்கு காரணம் நம்மினுள் உள்ள வெறி விடுதலை அடையாமல் இருப்பதே.

உங்களுடைய ஆக சிறந்த படைப்புகளில் ஒன்று 3 iron, ஆனால் கொரியாவில் அதைவிட Bad guy தான் நன்றாக ஓடியது. பொதுவான கொரியனின் வாழ்கையை விட்டுவிட்டு, ஏன் கவணிக்கப் படாதவர்களின் வாழ்வினை பதிவு செய்கிறீர்கள் ? அல்லது அதுதான் உங்களுடைய ஆக சிறந்த படைப்பை உருவாக்கும் என்று நம்புகிறீர்களா?

கிம் கி டக்: நான் அவர்களுடைய இயல்பான வாழ்க்கையை பதிவு செய்யவே விரும்புகிறேன். அவர்களும் நம்மை போன்றவர்களே. மேலும் எந்த திரைப்படம் எடுத்தற்காகவும் நான் பெறுமை கொள்ளவில்லை. என்னுடைய சிறந்த படம் நான் இன்னும் எடுக்கவில்லை என்றே நினைக்கின்றேன். கொரியாவில் இன்னமும் பார்வையாளர்கள், ஒரு பிரபல நட்சத்திரத்தை பார்பதற்காகவே திரையரங்கிற்கு வருகிறார்கள். Cho Jae-Hyan இல்லாமல் Bad guyயை 10ல் ஒருவர் கூட வந்து பார்த்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன், உண்மையில் அவ்வாறு அதிக அளவு மக்கள் வந்து என் திரைப்படத்தை பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஒவ்வொரு கொரியனுக்கும் என்னை பற்றி நன்கு தெரியும், ஒவ்வொரு கொரியனும் கொண்டாடும் திரைப்படத்தை எடுக்க எனக்கு விருப்பம் இல்லை. என்னை பொருத்த வரை மேற்கத்தியர்கள், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஒரு இளைஞன், இன்று எவ்வாறு வாழ்கிறான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதேயாகும்.

சமரிடன் கேர்ள் படப்பிடிப்பின் போது
Hollywoodல் இருந்து ஏதும் வாய்ப்பு வந்ததா, உங்களுக்கு Hollywoodல் பணி புரிய விருப்பம் இருக்கிறதா?


கிம் கி டக்: நான் கொரியாவில் எடுக்கும் திரைப்படமே, அமெரிக்க விநியோகிஸ்தர்களுக்கு, அங்கு வெளியிட போதுமானதாகும் என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு திரைப்படம் எடுக்கும் பட்சத்தில், அது பிரபல நடிகர்கள் பலர் உள்ளடக்கிய அதிக பொருட் செலவிலான திரைப்படமாக இருக்கும். மேலும் ஆசியாவின் புத்த மத போரினை பற்றியே படமாக்க ஆசை படுகிறேன். எந்த ஒரு Hollywood நடிகரும் இது வரை “உங்களிடம் வேலை செய்ய விருப்பம்” என்று என்னிடம் தெரிவிக்கவில்லை, ஒரு வேலை உங்களுக்கு தெரிந்தவர் யாரேனும் இருந்தால் கூறவும்.

kim ki-duk ன் சில திரைப்படங்கள்

1996 - Crocodile
2000 - Real Fiction
2001 - Bad guy
2003 - Spring, Summer, Fall, Winter and Spring
2004 - Samaritan Girl
2004 - 3 iron
2006 - Time
2007 - Breath
2011 - Arirang
2012 - Pieta'

DVD talk கிற்காக கொடுக்கப்பட்ட Interviewன் மொழியாக்கம்


Comments

  1. மிக்க நன்றி நண்பரே. தமிழ் விக்கிப்பீடியாவில் கிம் கி-டக் குறித்து எழுதுவதற்கு உங்களைப் போன்ற தமிழறிந்த பல நண்பர்கள் அவரின் படத்தில் ஏற்பட்டிருக்கும் தாங்களே காரணம். அக்கட்டுரையை பெரியதாக மாற்ற உங்களது இந்த கட்டுரை பெரிதும் உதவும். உங்களால் முடிந்தால் இச்சேவையைத் தொடருங்கள். நன்றி :-)

    ReplyDelete

Post a Comment