Psycho (1960)

நார்மன் பேட்ஸின் கோப்புகளில் இருந்து...


நார்மன் பேட்ஸ் தான் மரியோனின் கொலைக்கும், ஆர்போகஸ்டின் கொலைக்கும் உண்மையான குற்றவாளி. அவரது தாயார் அவருக்கு (மனம் சார்ந்த) கற்பனையானதொரு பிம்பமாகவே காட்சியளிக்கிறாள். ஏனெனில் அவள் இறந்துவிட்டாள் என்று நார்மன் கற்பனை கூட செய்திருந்ததில்லை. அவரது தாயார் அவரினுள் ஸ்பிலிட் பெர்சனாலிடியாக வந்து சென்ற போதிலும் நார்மன் பேட்ஸ், தனது சொந்த எண்ணங்களையே வெளிப்படுத்தினார்.

நார்மன் பேட்ஸ் தாய் மீது குற்றம் சுமத்துவது என்ற யோசனை பொருத்தமற்றதாக தெரிகிறது. காரணம் அவள் இறந்துவிட்டாள், மேலும் அவள் அதை உடல் ரீதியாக செய்வதற்கு வழியிருப்பதாக தெரியவில்லை. அவரின் தாய்தான் இரண்டு கொலைகளுக்குமான காரணம் என்ற சிந்தனை நார்மன் பேட்ஸின் மனதில் மட்டுமே உள்ளது. அவர் தனது தனிப்பட்ட உலகில் தனது தாயாரை கற்பனை செய்து வைத்திருந்தார் அதுவே அவரது பிரச்சனையாகவும் இருக்கிறது. தன் தாயின் மீது அதீத பயமும், அன்பும் கொண்டிருந்த அவர், அவளின் மரணத்தை ஏற்க முடியாதவராக இருக்கிறார். அவர் தனது தாயின் மரணம் நிகழ்ந்தபின் யதார்த்த உலகில் சராசரி வாழ்வினை சமாளிக்க முடியவில்லை. எனவே அவர், தன் உடலின் ஒரு பகுதியில் தன் தாயாகவும், மற்ற ஒர் பகுதியில் தானாகவும்(நார்மன் பேட்ஸ்)  என ஒர் குழப்பமான வாழ்வினை வாழ்ந்து வந்தார். அதை பாதுகாக்கும் முயற்சியில் அவரது தாயின் குரலில் பேச முயன்றார். ஏனெனில் திரைப்படம் முழுவதும் அவர்கள் நார்மன் பேட்ஸின் தாயின் முகத்தை காட்டியது இல்லை.  தாய் தன்னை எப்பொழுதும் கண்கானித்துக் கொண்டே இருக்கிறாள் என்றதொரு கற்பனை நார்மன் பேட்ஸின் ஆழ்மனதில் பதிந்திருந்தது. அதுவே மோட்டலுக்கு வரும் மரியோனிடம் நடந்து கொள்ளும் முறையிலும், ஆர்போகஸ்டினிடம் பேசும் போதும் சந்தேகம் கொள்ள உந்துசக்தியாக இருந்தது.

- முற்றும்

Comments